ஒ சுனந்தா சுனந்தா பாடல் வரிகள் - முப்பொழுதும் உன் கற்பனைகள்

by Geethalakshmi 2012-06-19 18:17:25

ஒ சுனந்தா சுனந்தா பாடல் வரிகள் - முப்பொழுதும் உன் கற்பனைகள்




ஒ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தா
தேன் சுவையாய் நிறைந்தால்

முதல் முறை
கடிவாளம் இல்லா காற்றை போலவே
வடிவங்கள் இல்லா வாசம் போலவே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ
அலை போலே நான்

ஒ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தா
தேன் சுவையாய் நிறைந்தால்

மழை விழுகின்ற பொழுதினிலே
மயில் நடனங்கள் புரிகிறதே
பனி துளிகளின் சுமைகளிலே
மலர் ஒரு புறம் சரிகிறதே
நேற்று நான் வேறொரு ஆடவன்
இன்று நான் வெண்பனி ஆனவன்
தேய்பிறை நாட்களும் போனதே
வான் நிலா பௌர்ணமி ஆனதே

ஒ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தா

துயில் கலைந்திடும் விழிகளிலே
புது நிறங்களில் கனவுகளே
அவ மணிகளின் நடுவினிலே
தனி மரகத பவளங்களே
மின்மினி பூச்சிகள் குடியே
பேசுதே நித்தமும் வம்புகள்
யார் இவன் அந்நியன் ஆயினும்
பெண் மனம் காட்டும் அன்புகள்

ஒ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தா
தேன் சுவையாய் நிறைந்தால்

முதல் முறை
கடிவாளம் இல்லா காற்றை போலவே
வடிவங்கள் இல்லா வாசம் போலவே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ
அலை போலே நான்
2259
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments