வழி சொல்லு பிள்ளையாரப்பா
by Geethalakshmi[ Edit ] 2012-07-11 17:38:21
வழி சொல்லு பிள்ளையாரப்பா
நூற்றி எட்டு தேங்காய்
எண்ணி உடைக்கிறேன்
ஆயிரம் தோப்புக்கரணம்
அழகாய் போடுகிறேன்
அப்பனே!
பிள்ளையார் அப்பனே!
பெட்ரோல் இல்லாமல்
என் வாகனம் ஓட
வழி சொல்லப்பா?
(பக்தனே! மகனே!
நானே மூஞ்சுறு
வாகனத்தில்தான்
போகிறேன்
வீட்டில் பெருச்சாளி
இருந்தால் பிடித்துக்கொள்!)