இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பயன்படுத்துவது எப்படி?
by Sanju[ Edit ] 2012-07-14 16:33:41
இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பயன்படுத்துவது எப்படி? - Use Gmail with Internet connection
பெரிய நிறுவனங்களில் வேலை செய்கின்ற பலருக்கு இந்த வசதி பற்றிய விழிப்புணர்வு நிறையாகவே இருக்கின்றது.கூகிள் இந்த அம்சத்தை அனைவருக்கும் வழங்கும் விதமாக ஜிமெயில் offline என்ற ஒன்றை தந்துள்ளது.
ஜிமெயில் offline என்பது இணைய இணைப்பு இல்லாத போது உங்கள் அஞ்சல்களுக்கு பதிலளிக்க,வாசிக்க,மற்றும் archive செய்ய வடிவமைக்கப்பட்ட கருவியாகும். இந்த வசதியை ஐபோன், அண்ட்ராய்டு, tablets அல்லது கணினிகளில் உபயோகிக்க முடியும்.இந்த வசதியை பயன்படுத்தி கூகிள் டாக்ஸ்,காலண்டர் மற்றும் ஜிமெயில் உபயோகப்படுத்தலாம். இங்கே ஆஃப்லைன் Gmail ஐ பதிவிறக்கவும்.
இந்த அம்சத்தை பயன்படுத்த,
1. முதலில் கூகிள் குரோம் web browser ஐ install செய்யவும்.
2. ஒரு புதிய tab ல் கூகிள் குரோம் web browser ஐ திறக்கவும்.பின்னர் Chrome Webstore இல் ஆஃப்லைன் Gmail என்று தேடவும்.
3. ஆஃப்லைன் Gmail ஐ install செய்ய,அங்கு இருக்கும் ஆஃப்லைன் Google Gmail thumbnail ஐ சொடுக்கவும்.
4. Allow and Continue ஐ கிளிக் செய்து, ஜிமெயிலை offline இல் பயன்படுத்தலாம்.