Billa - 2 story

by satheesh 2012-07-14 17:01:43

billa-2.jpg

துபாயில் விசில், ரகளை என அனைத்துமுடன் இந்தியாவில் வெளியாவது போல் ஒரு படம் வெளியாகிரதென்றால் அது அஜித் படம் மட்டும்தான்! படத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னமே வெளியில் காத்திருந்து – கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம், முக்கியமாக இலங்கைத் தமிழர்களில் முக்கால்வாசிப்பேர் அஜித் ரசிகர்கள் என நினைக்கிறேன்.!

கதை:

மங்காத்தா என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்த அஜித்தின் அடுத்த படம் , 2007 இல் வெளியாகி சக்கை போடு போட்ட பில்லா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வரும் படம் . உன்னைப்போல் ஒருவன் என்ற வெற்றித் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த சக்ரி டலோடியின் இரண்டாவது படம் . இவ்வாறு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கொண்டு வெளிவந்திருக்கும் பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா??? நிச்சயமாக ஆம் என்று கூறலாம்

படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் “தம்” அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்…உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா…என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது…!

சக்கரவர்த்தி டொலட்டி”க்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்

படத்தில் பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது..குறிப்பாக “மதுரை பொண்ணு…” பாடல் வாலிபர்கள் மனதில் கோடி பட்டாம் பூச்சி…சும்மா தாவணிய தூக்கி தூக்கி ஆடி இருக்காங்க…!

படத்தி ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..இது என்று சொன்னால் அது மிகையாகாது..!எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்…!

படத்தி இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால் இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!இப்ப கூட சொல்லணும் போல இருக்கு அடுத்த அடுத்த…..தலதான் என்று…!

படத்தின் எடிட்டருக்கு பெரிய ஒரு நன்றி சொல்லியே ஆகணும் ஏன்னா இத்தனை கத்திரிக்கோல் போட்டு எந்த காட்சிகளிலும் அது தெரியாதது போல எடிட் செய்து இருக்கிறார்.படத்தின் சுவார்யஸ்திற்க்கும் இவர்தான் பொறுப்பு…தனது கடமையை முழுமையாக செய்து முடித்திருக்கின்றார்.படத்துக்கு மேலும் பலம் சேர்ந்தது இருக்கின்றார்..!
1114
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments