திருமாலின் பத்து அவதாரங்கள்

by Geethalakshmi 2012-07-20 17:08:27

திருமாலின் பத்து அவதாரங்கள்


1. மச்ச அவதாரம்
matcha-avatharam.jpg

கோமுகன் என்னும் அசுரன் வேதங்களைத் திருடி விழுங்கிவிட்டு மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டான். அவனை கண்டுப்பிடித்து வதைக்க திருமால் மேற்கொண்டதே மச்ச அவதாரம்.

2. கூர்ம அவதாரம்
koorma-avatharam.jpg

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற மந்தார மலையை மத்தாகப் பயன் படுத்தியபோது, அதற்கு முட்டுக் கொடுக்க திருமால் மேற்கொண்ட ஆமை அவதாரம்.

3. வராக அவதாரம்
varaga-avatharam.jpg

இரண்யாட்சன் என்னும் அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளிக்க முயன்ற போது, அதை மீட்க திருமால்
மேற்கொண்ட பன்றி அவதாரம்.

4. நரசிம்ம அவதாரம்
narashima-avatharam.jpg

பக்தன் பிரகலாதனை காத்து ரட்சிக்கவும், பிரகலாதனின் தந்தை இரணியகசிபுவை சிட்சிக்கவும் திருமால் மேற்கொண்ட
அவதாரம். உடல் மனிதனாகவும், தலை சிங்கமாகவும் தோன்றிய அவதாரம்.

மேலே உள்ள நான்கு அவதாரங்களிலும் திருமாலுக்குப் பெற்றோர் கிடையாது.

5. வாமன அவதாரம்
vamana-avatharam.jpg

காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு திருமால்
வதை செய்வது வாமன அவதாரம்.

6. பரசுராம அவதாரம்
parasurama-avatharam.jpg

ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைகும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைப்
பூண்டோடு அழிக்க முற்பட்ட அவதாரம் இது.

7. இராம அவதாரம்
rama-avatharam.jpg

அயோத்தி மன்னன் தசரதனுக்கும் கோசலைக்கும் மகனாய் பிறந்து, சீதையை மணம் முடித்து, இராவணனையும்
இதர அரக்கர்களையும் கொல்வதற்கு எடுத்த அவதாரம்.

8. பல பத்திரர் அவதாரம்
balapathirar-avatharam.jpg

பல பத்திரர் கிருஷ்ணனின் ஒன்று விட்ட சகோதரர் உறவு முறை. இவருடைய தந்தைப் பெயர் வசுதேவர். அவருக்கு
தேவகி, ரோகிணி என இரண்டு மனைவியர் உண்டு. பல பத்திரர் அவதாரம் பிரலம்பன் என்கிற அரக்கனை அழிக்க நேர்ந்த அவதாரம்.

9. கிருஷ்ண அவதாரம்
krishna-avatharam.jpg

வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாய்ப் பிறந்து, பாரதப் போரை நடத்தி, உலகத்திற்குத் தேவையான கீதாபதேசம் செய்த அவதாரம்.

10. கல்கி அவதாரம்
kalki-avatharam.jpg

உலகை அழித்துப் புது உலகினைப் படைப்பதற்காக திருமால் மேற்கொள்ளவிருக்கிற அவதாரம் இன்னும் நிகழவில்லை.
4303
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments