புண்ணாக்கு கவிதை

by Geethalakshmi 2012-08-06 11:59:53

புண்ணாக்கு கவிதை


கை வலி கால் வலி
உடம்பு வலி அத்தனைக்கும்
மருத்துவரிடம் சென்றால்
அவர்தான் என்ன செய்வார்

அய்யோ...பாவம்
அப்படித்தான்
குடும்பக் கவலை
குதறிப்போட்ட
குடும்பத்தலைவர் .
அசத்தலாக உடம்பு
அவஸ்த்தையாக இருக்கென்று
அவரும் போனார் வைத்தியரிடம்

அந்த மருத்துவரும்
ஆய்வுகள் பல செய்து
எதுவும் அறியாது
எழுதினார் ஆங்கிலத்தில்
புண்ணாக்கு பத்து என்று

கடைக்காரரும்
மருந்துச் சீட்டை
பார்த்ததும் கொடுத்தார்
மாத்திரைகள் பத்து
வைட்டமின் A 2 Z

(புண்ணாக்கு என்பது
வைட்டமின் மாத்திரையின்
மறுபெயரோ?)


இது நண்பர் tamilnadu 108 விவாத மேடைக்கான பதிவு

எழுதியவர் :பரிதி.முத்துராசன் @Eluthu.com
1695
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments