காதலனே உன்னைத் தேடுகிறேன்

by hioxd 2012-08-20 18:12:59

வற்றாத நதிக்கரையில்
உன்னை சுற்றி வந்த விழிகள்
வற்றி போனக் கண்ணீர்த் துளிகளால்
உன்னைத் தேடுகிறேன் !

ஓயாத
என் உதிரம் எனும் ஓடை
உன்னை காணாமல் ஓய்ந்ததே
போனதடா !

உன்னால்
என் விழியால் பூத்த
பூவெல்லாம்
உன்னை எதிர்பார்த்துக்
உருகி உருகி கரையுதடா !

நீ
பேசிய வார்த்தைகள்
எல்லாம் என் நெஞ்சில்
கானமாய் கேட்குதடா!

உன்னோடு
நான் இருந்த பொழுதுகளை
எல்லாம் ரசித்த
அந்த நிலவும் உன்னைத்
தேடுது !


என் இதயம்
உன் அரவணைப்பை கண்டது
கள்வனே !
உன்னை கணாமல்
மண்ணின் அரவணைப்பில்
சேரபோகுது !


எந்தன் விழிகள்
உந்தன் விழியை மறக்கவில்லை
ஆனால்
என்னை மறந்து
உன்னைதேடுது என் விழிகள் !

என் காதலை
கொட்டித் தீர்த்துவிட்டேன்
என்னால் காலத்தைக் கட்டிவைக்க
முடியாது
எந்தன் உயிரை
வெட்டிக்கொள்ளவும் முடியல !

உனக்காக காத்திருப்பேன்
காலத்தோடு இணைந்து
கள்வனே
எனக்காக வந்துவிடு
காற்றோடு கலந்து !
1827
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments