அலைகள் ஓய்வதில்லை - விழியில் விழுந்து இதயம் நுழைந்து பாடல்

by Sanju 2010-01-04 19:53:22

படம் : அலைகள் ஓய்வதில்லை
பாடல் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து


விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

(விழியில்...)

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெரும்

(விழியில்...)

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்


1791
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments