புரியாத கவிதை
by Naveenkumar[ Edit ] 2012-12-24 18:23:44
நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது..
என் மனக்கண்ணாடியை
நீ அணிந்து பார்த்தாலும்
உனக்கு தெரியாது..
என்
மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்
அதை படம் பிடித்து
கவிதையாய் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா?
எனது கவிதை புரியுமா?
உனக்கு
என் கவிதை புரியாததால்
நான்
வருத்தப்பட முடியாது...
என் வருத்தங்களை
கவிதையாய் படைக்கையில்
அதுவும் பிறர்க்கு புரியவில்லையென
அதற்கும் வருத்தப்பட மாட்டேன்..
என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து
உணர்ச்சிகளை சேர்த்து
கவிதை தூரலாய் தூவுகிறேன்..
அந்த தூறலில்
நனைவது
உனக்கு பிடிக்கவில்லை என்பதால்
எனது கவிதை தூறல் நின்று விடாது..
என்ன செய்வது,
உடையும் நிலையில் இருக்கும்
அணையின் மீது பெய்யும்
கார்கால மேகமாக
சில நேரம்
எனது கவிதை...
மீண்டும் சொல்கிறேன்
நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது ..