சந்தன பூங்காற்றே பாடல் வரிகள் அழகிய தீயே
by Geethalakshmi[ Edit ] 2013-03-25 18:49:38
சந்தன பூங்காற்றே பாடல் வரிகள் அழகிய தீயே
சந்தன பூங்காற்றே சந்தன பூங்காற்றே
என் இளமையின் கனவினை திமிரென உரைத்தது யார்
என் சரிகம சிரிப்பினை சிறையிட நினைத்தது யார்
நான் எல்லை தாண்டிவிடவில்லை கூண்டுக்குள்ளும் இல்லை
பூப்போலே திறந்து நதி போல துளி திரிந்து
தினம் தென்றல் போல வாழ்ந்தால் ஆனந்தம்
எனக்கொரு ஆசை உனக்கொரு ஆசை
உதடுக்கு உதடு புது புது பாஷை
குற்றம் என்றே இதை சொல்வாயோ..
அலைகள் வேறு கரைகள் வேறு
கூண்டுகள் வேறு கூடுகள் வேறு
இரெண்டும் ஒன்றே என்று சொல்வாயோ..
புரியும் வரைதான் மனதின் மயக்கம்
சரியா!!!!தவறா!!!! என்று ஏங்காதே
தவறே ஒரு நாள் சரியாய் தெரியும்
வாழ்க்கை இதுதான் அலைபாயாதே
நான் தேடும் உலகு அது மாறுபட்ட அழகு
பொன்வானின் அளவு என் அந்தரங்க கனவு
பனிவிழும் பார்வை பரம்பரை நாணம்
தணிந்திடும் கோபம் திருமண ஆசை
பெண்ணில் எல்லாம் இதை பார்த்தேன்
இலக்கணம் இல்லா இலக்கியம் நானே
விழிகளுக்கெல்லாம் அதிசயமானேன்
மௌனத்தில் நானே இசை கேட்பேனே
உறவில் கலந்து கருவை சுமந்து
உயிரை படைக்கும் பெண்கள் தெய்வங்களே
கோவிலும் வேண்டாம் சிறைகளும் வேண்டாம்
பெண்ணை பெண்ணாய் கொஞ்சம் பாருங்களேன்
ஓர் நாளே இருக்கும் சிறு பூவும் வண்டை மணக்கும்
உள்ளங்கள் கலந்தால் வாழ்வில் அர்த்தம் இருக்கும்
சந்தன பூங்காற்றே சந்தன பூங்காற்றே
நன் இயக்கிட வந்தது திரைப்பட உலகத்திலே
நன் எழுதிய திரைக்கதை ஜெயித்தது நிஜத்தினிலே
ஒரு பொய்யில் வெற்றி அடைந்தாலும் கண்ணில் இல்லை தூக்கம்
என் பாதை சரியா இது காலம் செய்த பிழையா
என் நெஞ்சம் எங்கும் எதோ ஆதங்கம்