என் கையில் என் மரணம்

by barkkath786 2013-05-24 19:25:14

மனிதனை மெல்ல
மனிதனால் கொல்ல
மனிதனே விதைத்த
மனிதப்புதைகுழியே
இந்தப் புகைப்பிடித்தலடா

பகடியாய் நினைத்து
பகட்டுக்கு பிடிக்க
பருவத்தினை குறைத்து
படுக்கையில் தள்ளும்
பாதகனடா இது

சினிமாவில் பார்த்து
சின்னதாய் விதைக்க-என்
சிறப்பை குறைத்து
சிறுக்க வைத்த
சின்னமடா அது

இதயத்தை எரித்து
இயலுமையை குறைத்து
இறப்பை எனக்கு
என் முன்னால் காட்டிய
இராட்சசனும் அவனடா

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு
1932
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments