தமிழ் எண் ஒன்பது (9) என்ற எண்ணின் பெயர் தொண்டு
by Geethalakshmi[ Edit ] 2013-07-18 12:51:21
தமிழ் எண் ஒன்பது (9) என்ற எண்ணின் பெயர் தொண்டு
ஒன்பது
தமிழில் இந்த ஒன்பதோடு யாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, அதன் பெறுமதிகளை எல்லா இடத்திலுமே பத்தால் வகுத்து வைத்திருக்கிறார்கள்.
உதாரணமாக ... அறுநூறு, எழுநூறு, எண்ணூறு, தொண்ணூறு... என்று வரவேண்டிய தொண்ணூறை எண்பதுக்குப் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். என்ன நடந்தது?
உண்மையில் எட்டுக்கு அடுத்தது 'ஒன்பது' அல்ல, 'தொண்டு'. 9 என்ற எண்ணின் பெயர் தொண்டு.
"… காலென பாகென வொன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறேன வேழென வெட்டெனத் தொண்டென.."
இந்தத் தொடர் பரிபாடலில் வருகிறது. எட்டுக்கு அடுத்தது தொண்டென இது உள்ளிட்ட பல பழைய இலக்கியங்களில் வருகிறது. அதன்படி 90 என்பது 'தொன்பது', 900 என்பது 'தொண்ணூறு' என இவ்வாறே அமையும். காலம் தொண்டை அழித்து, தொன்பதை ஒன்பதாக்கி தரம் இறக்கிவிட்டது.