காட்விட் பறவை (Godwit)
by Sekar[ Edit ] 2013-10-18 10:07:41
உணவு உறக்கம் இல்லாமல் சுமார் 11,000 கிலோ மீட்டர் தொடர்ந்து பறக்கிறது ஒரு பறவை . அதன் பெயர் காட்விட் (Godwvit).அதாவது எட்டு நாட்கள் தரையில் கால் ஊன்றாமல் தொடர்ந்து பறக்கிறது இந்த காட்விட் பறவை.
உணவிற்காகவும் ஓய்விற்காகவும் ஒரு போதும் தனது பயணத்தை நிறுத்தாமல் 11,677 கி.மீ. கடந்து அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு, ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் பயணிக்கிறது இப்பறவை. வசந்தகாலத்தின்போது மீண்டும் 11,677 கி.மீ. பயணித்து அலாஸ்காவுக்கே வருகிறது. அதுமாத்திரமல்ல இப்படி பறக்கும் நாட்களில் அதன் உடல் எடையும் சற்றே அதிகரிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?
இவ்வாறு எட்டு நாட்கள் உணவு உறக்கமின்றி தனது உடல் சக்தியையும் செலவழித்தும்,
பறக்கவும், உடல் எடை அதிகரிக்கவுமான காரணங்களை பறவையியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்தபோது கண்டறிந்த உண்மைகள் என்னவென்றால்,
1) மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இந்த காட்விட் பறவைகள் பறப்பதற்க்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன.
2)தான் பறக்கும் ஒவ்வெரு மணி நேரத்துக்கும் ஒரு முறை, தனது உடல் எடையில் 0.41 சதவீத அளவை மட்டுமே உணவாகக் கிரகித்துக் கொள்கின்றன. தனது உடலில் ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள கொழுப்பையும் புரதத்தையும் பறக்கும் சக்திக்குப் பயன்படுத்துகின்றன.
3)"ஏரோடைனமிக்" என்ற காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் உடலமைப்பைப் பெற்றிருப்பது.
ஆக விமானத்துக்கே சவால் விடுகிறது இந்த காட்விட் பறவை.