பிறருக்காக மட்டுமே கூலியைவிட கூடுதலாக
by muthu[ Edit ] 2013-10-30 11:36:56
தொட்டில் கட்ட வாய்ப்பில்லாத வெட்டவெளியில், ஒற்றைக் கம்பு ஒருபக்கமாய் சாய்ந்து ஒரு பிள்ளையின் உறக்கத்தைத் தாங்கிப்பிடிக்கிறது.
பால், மருந்து, தண்ணீர் என குடுவைகள் தவம் இருக்கின்றன அந்தப் பிள்ளையின் விழிப்பிற்காக!
ஒற்றைச் சிணுங்களைக் கண்ணுறும் தாய் ஓடி வந்து இசைக்கும் தாலாட்டில் தூக்கம் தொடர்கிறது.
அவர்கள் போராடிப் பூட்டும் தண்டவாளத்தில், அவர்களுக்கு ஒரு சொகுசுப் பயணம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை
எங்கும், யாரோ உழைக்கிறார்கள், யாரோ படைக்கிறார்கள்,யாரோ உருவாக்குகிறார்கள்,யாரோ செய்கிறார்கள் பிறருக்காக மட்டுமே கூலியைவிட கூடுதலாக !