இணையதள பாதுகாப்பு - internet data safety
by Prakash[ Edit ] 2013-12-16 15:53:51
பாதுகாப்பு தொழில்நுட்பத்தை சரியாக கடைபிடிக்காத இணையதளங்களை hack செய்ய முடியும். ஆனால் எல்லா இணையதலங்கள்ளேயும் பாதுகாப்பற்றதாக கருதி விட முடியாது. எதிரி நாடுகளும் இணையதள திருடர்களும் இணைய உலகில் வேவு பார்ப்பதும் தகவல்களை திருடுவதும் சகஜம் தான். வைரஸ் பாதிக்கபட்டால் புது கணினி வாங்குகிற அவசியம் இருக்காது. வைரஸ் மென்பொருளால் கணினியில் உள்ள மற்ற மென்பொருள்கள் அல்லது இயங்குதளம் பாதிக்கப்படலாம். ஓன்று ஒரு நல்ல ஆண்டி வைரஸ் கொண்டு சரி செய்யலாம் அல்லது இயங்குதளத்தை format செய்யலாம்.
உங்கள் கணினி கோப்புகளை பாதுக்காக்க சில நடவடிக்கைகள் அவசியம். உங்கள் கணினியில் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் பொழுது நம்ப தகுந்த சாப்ட்வேர் தானா என்று சரி பார்க்க வேண்டும். உங்கள் password சுலபமானதாக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை மற்றவர்கள் எளிதாக கண்டு பிடிக்க இயலும்.
அதனால் உங்கள் கணினியில் இருக்கும் முக்கியமான கோப்புகளை backup செய்து கொள்வது அவசியம். ஒரு dvd -இலோ pendrive - லோ backup செய்து கொள்ளலாம். உங்கள் password , bank acccount number போன்ற முக்கியமான தகவல்களை கவனத்துடன் கையாள வேண்டும். இவைகளை தட்டச்சு செய்யும் பொழுது சரியான இணைய தளத்தில் தானா கொடுக்கிறோம் என்று சரி பார்க்க வேண்டும்.