மொழிபெயர்ப்பு மென்பொருள் - Language Translating Software
by Prakash[ Edit ] 2013-12-16 15:58:00
Google Translate மொழிபெயர்ப்புக்கு பயன்படுத்தலாம். அனால் பெரிய படைப்புகள் அளிக்கும் பொழுது அதில் நிறைய பிழைகள் வர வாய்ப்பு உள்ளது. மொழி பெயர்ப்பு செய்த பின் மொழி தெரிந்த ஒருவர் தவறுகளை படித்து பார்த்து திருத்த வேண்டி இருக்கும்.
தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மிகவும் தாறுமாறாக தான் google மொழிபெயர்க்கிறது (இது சுலபமான வேலை அல்ல). ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு மொழிகளிடையே மொழி பெயர்ப்பது தவறுகளை குறைத்து விடும். உதாரணமாக நீங்கள் ஆங்கிலத்தில் ஒரு படைப்பு எழுதி இருந்தால் அதை ஜெர்மன் மொழிக்கு அல்லது பிற லாடின் மொழிகளுக்கு மொழி பெயர்ப்பது சுலபம். ஆனால் இந்திய மொழிகளுக்கும் ஆங்கில மொழிக்கும் வித்தியாசம் அதிகம். இந்தி, திராவிட மற்றும் பல்வேறு வகைகள் உடைய இந்திய மொழிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மொழிகளிடேய மொழிபெயர்ப்பு (மென்பொருள் மூலம் ) செய்வது நல்ல பலனை தரும். ஆனால் பிழையற்ற படைப்பு வேண்டுமானால் மனிதனின் மேற்ப்பார்வை அவசியம். வரும் காலத்தில் இதற்காக சிறந்த மென்பொருள்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்ப்போம்.