உலகின் முதல் பெண் அறிவியல் வல்லுநர்

by saira 2014-02-18 15:52:19

உலகின் முதல் பெண் அறிவியல் வல்லுநர்

அறிவியல் முறைப்படி எதையும் சாதிக்க முடியும் என்பதை முதலில் சாத்தியப்படுத்திக் காட்டியதும் ஒரு பெண் தான்.இவர் தனது ஆராச்சியை நறுமணங்களில் இருந்தே துவங்கியிருக்கிறார்.
சைப்ரஸ்,பால்சம் பலவகை மூலிகைகள்,மலர்கள்,இயற்கை எண்ணெய்கள்,பலவகை கொட்டைகள் இவற்றில் இருந்து நறுமணத் திரவத்தைப் பிரித்தெடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்ததும் இவர்தான்.
வேதியியல் கூடங்களும்,ஆய்வக உபகரணங்களும் இல்லாத நாளிலேயே டிஸ்டிலேசன் எனப்படும் காய்ச்சி வடித்தல் முறையைச் சாத்தியப்படுத்தியதும் அதே பெண்தான்.பண்டைய மெசபடோமியாவில் வாழ்ந்த தாப்புச்சி என்னும் பெண்தான் உலகின் முதல் பெண் ஆய்வக வல்லுநர்.அவரே தொழில் முறையாக மலர்களில் இருந்து நறுமணத் திரவியங்களை முதன்முதலில் வடித்தெடுத்தவர்.
கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த கியூனிபார்ம் அட்டவணை,
அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் ஆய்வுக்கூட வல்லுநர் தாப்புச்சி மட்டுமே.சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே ஆண்களுக்கு இணையாக அறிவியல் தொழில் நுட்பத்தில் சாதனைகளைப் படைத்தவர் இவர்.
தாப்புச்சி,தனியொரு மனுஷியாக முன்னின்று இந்த அற்புதத்தத்தை நிகழ்த்தியிருக்கிறார்.இவர் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் வேதியியல் ஆய்வுக்கூடத்தை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.பீங்கான் குடுவைகள்,கிண்ணங்கள்,இலைகளை அரைக்கப் பயன்படும் சிறிய உரல்கள் போன்றவற்றை வைத்து நறுமணத் திரவியத் தயாரிப்பு நடந்திருக்கலாம் என்பது அகழ்வாராய்ச்சியாளர்களின் கருத்து.
தாப்புச்சிக்கு பிறகுதான் பல ஆண்கள்,நறுமணத் திரவியங்கள் தயாரிப்பில் களமிறங்கியிருக்கிறார்கள்.ஆனாலும் நறுமணத் திரவியங்களின் ஆதித்தாய் தாப்புச்சி தான்.அவருடைய நினைவாக சில நறுமணத் திரவியங்கள் அவருடைய பெயரிலேயே உலாவருகின்றன.
இன்று எண்ணிலடங்கா நறுமணங்களில் செயற்கை திரவியங்கள் வந்துவிட்டன.
ஆனால் இயற்கையான,உடலுக்கு எந்த தொந்தரவும் தராத தாப்புச்சியின் நறுமணத் திரவியம் தனித்துவம் நிறைந்தது.அந்த செயல் முறையின் அடிப்படையிலேயே பிற்காலத்தில் மலர்களில் இருந்தும்,பலவகை வாசனைப் பொருட்களில் இருந்தும் நறுமணத் திரவியங்கள் தயாரிக்கப்பட்டன.


Tagged in:

1732
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments