அம்மா.. அப்பா...
by Sekar[ Edit ] 2014-04-02 17:27:07
அம்மா என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம்
நமக்கு உயிர் கொடுத்தவள் அம்மா என்பதால்
உயிர் எழுத்தின் "அ" என்ற முதல் எழுத்தும்,
அந்த உயிருக்கு உடல் (மெய்) வேண்டும் என்பதால்
"ம் " என்ற மெய் எழுத்தை இரண்டாவதாகவும்,
அந்த உயிரையும் உடலையும் ஒன்றாக்கி 10 மாதம் கழித்து ஒரு குழந்தையாக தருவதால்
" மா " என்ற உயிர்மெய் எழுத்தும் சேர்ந்த
சொல்லர்த்தம் மிக்க ஒரு தமிழ் வார்த்தையே
"அம்மா" ஆகும்.
அதுபோல் "அப்பா" வார்த்தையும்
அந்த உயிருக்கு உரியவர் என்பதால்,
உயிர் எழுத்தின் "அ " என்ற முதல் எழுத்தும்,
அம்மா என்பவள் மென்மையானவள் என்பதால் ம் என்ற மெல்லினம் வந்ததுபோல்,
அப்பா சற்று வன்மையானவர் என்பதால் 'ப் ' என்ற வல்லினம் எழுத்தும்,
உயிரும் மெய்யும் சேர்ந்து குழந்தையாக உருவெடுத்து வந்த,
அந்த குழந்தை தன் சொந்தகாலில் நிற்கும் வரை,
அதற்கு உயிர்மெய்யாக இருந்து காப்பாற்றும் கடமை இருப்பதால்
"பா" என்ற உயிர்மெய் எழுத்தும் சேர்ந்த
சொல்லர்த்தம் மிக்க இன்னொரு தமிழ் வார்த்தையே
"அப்பா" ஆகும்.
இதுதான் தமிழ்.. இதுதான் தமிழினம்..
(தமிழருவி மணியன் அவர்களின் சொற்பொழிவிலிருந்து ..)