அதிசய அறிவியல் உண்மைகள்

by GOKILAVANI 2014-04-05 09:46:06

மனிதன் வாழ்நாளில் வாயில் சுரக்கும் உமிழ்நீரை கொண்டு இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பலாம்.

கைவிரல்களில் நடுவிரலில் வளரும் நகம் மற்ற விரல்களில் வளரும் நகங்களை விட வேகமாக வளரும்.

தினமும் சுமார் 50 கலோரிகள் என்ற விகிதத்தில் பெண்களை விட ஆண்கள் உடலில் உள்ள கொலுப்புச் சத்து அதிகமாக செலவாகிறது.

பெண்களை விட ஆண்களுக்கு விக்கல் அதிகம் வருகிறது.

ஆணுக்கு சுமார் 6.8 லிட்டர் இரத்தமும் பெண்களுக்கு சுமார் 5 லிட்டர் இரத்தமும் உள்ளது.

மனிதனின் மூளை விழித்திருக்கும் நேரத்தைவிட தூங்கும் போது அதிக ஆற்றலுடன் செயல்படுகிறதாம். இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையாம் !

மனித உடலில் உள்ள செல்களில் மிகப்பெரியது பெண்ணின் கருமுட்டை; மிகச்சிறியது ஆணின் உயிரணு.

உங்கள் ஐக்யூ எனப்படும் அறிவாற்றல் அதிகம் இருந்தால் நீங்கள் அதிகமாக கனவு காண்பீர்களாம் !

மனித முடியின் ஆயுட்காலம் மூன்றிலிருந்து ஆறு ஆண்டுகள்.

கால் விரல் நகங்களை விட கைவிரல்களில் வளரும் நகங்கள் நான்கு மடங்கு வேகமாக வளர்கின்றன.

நம் வயிற்றில் ஊறும் ஜீரண அமிலம் ஒரு துத்தநாக துண்டையும் கரைக்க வல்லது. ஆனால் இவை இரைப்பையின் சுவர்களை ஒன்றும் செய்வதில்லை. காரணம், அச்சுவர்கள் இடைவிடாமல் புதுப்பித்துக்கொண்டே இருப்பதுதான்.

பெண்களின் இருதயம் ஆண்களுடைய இருதயத்தை விட வேகமாக துடிக்கும்.

ஆண்களைப்போல் இரு மடங்கு கண்களை சிமிட்டுகிறார்கள் பெண்கள்.

ஆண்களை விட பெண்களுக்கு மோப்ப சக்தி அதிகம். இது அது அவர்களின் வாழ்நாள் முழுக்க தொடர்கிறது.

உங்கள் முழங்கையை உங்களால் நக்க முடியாது !

மனித உடலில் இரத்தம் பாயாத ஒரே பகுதி கண் விழிகளின் வெண்படலம். அதற்கு தேவையான பிராணவாயுவை அது காற்றிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்கிறது.

உங்கள் நாக்கு இளஞ்சிவப்பு (pink)நிறத்தில் இருந்தால் மட்டுமே உங்கள் நாக்கில் கிருமிகள் இல்லையென்று பொருள் அன்றி வெண்மையாக இருப்பின் வெண்படலமாக பாக்டீரியா படர்ந்து இருக்கிறது என்று பொருள்.

உங்களுக்கு தாகம் எடுக்கவில்லையானால் நீங்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால், ஏதோ ஒரு காரணத்தால் நம் உடலில் உள்ள நீர் சத்து முற்றிலும் தீர்ந்து விடுமானால் தாகம் எடுக்கும் செயல்பாடு நிறுத்தப்பட்டு விடுகிறது

ஆச்சர்யமான விஷயங்களை பார்க்கும் போது மனிதனுடைய கண்கள் 45 சதவீதம் வரை விரிவடைகின்றன.

நாம் தும்மும் ஒவ்வொரு தும்மலுக்கும் மூளையிலுள்ள உயிரணுக்கள் சில இறக்கின்றன.

இருதயத்துக்கு இடமளிப்பதற்க்காக உங்களது இடது பக்க நுரையீரல் வலது பக்க நுரையீரலை விட சிறியதாக இருக்கும்.

வியர்வை சுரப்பிகள் 1.43 pints வியர்வையை உற்பத்தி செய்கிறது.

தூக்கத்தின் போது உடல் 25.4 முறை அசைகிறது.

வாய் 4,800 வார்த்தைகளை பேசுகிறது.

உடல் 85.60, டிகிரி வெப்பத்தை இழக்கிறது.

மூக்கு 438 கன அடி காற்றை சுவாசிக்கிறது.

வயிறு 3.25 பவுண்டுகள் உணவு உட்கொள்கிறது.

வாய் 2.9 பவுண்டுகள் நீரை (அனைத்து திரவ உட்பட) அருந்துகிறது

முடி 0,01715 அங்குலம் வளருகிறது

நகங்கள் 0,00007 அங்குலம் வளர்கின்றன

இரத்தம் 16,80,000 மைல்கள் பாய்கிறது.

நுரையீரல் 23.045 முறை சுவாசிக்கிறது.

இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.
1442
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments