மெதுவாகத் தான் மெதுவாகத் தான் - Kochadaiyaan Lyrics

by thulashi 2014-06-09 20:03:11



மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈராக்கிறாய் பழி வாங்கவா
மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈர்க்கிறாய் பழி வாங்கவா
மயிலாசன மருவிதழ் நானே
மழை மேகமாய் இறங்கி வந்தேனே
உன் விழி ஓரத்தில் விழுந்து விட்டேனே நான்

மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈர்க்கிறாய் எனை வாங்கவா
அன்னம் மட வண்ணம்
அழகைச் சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுதா மன்மதம் இவள் அழகு
எட்டும் திசை எட்டும்
தினம் கட்டும் பரிவட்டம்
இன்னும் சொல்ல மொழி இல்லையே

கோடி வேண்டுமா குடை வேண்டுமா
உன் மடி போல யாவும் சுகம் நல்குமா

படை வேண்டுமா பகை வேண்டுமா
உனைப் போல் வீழ்த்த ஆள் ஏது
எனை வெல்ல யாரும் இல்லை
உனையின்றி திசைகள் வெல்லும் இசையே

ஆதி அந்தம் ஆகி வந்த ஜோதி இந்த அழகன்
மனம் கனி வையம் கொண்ட
ஏதன் தோட்ட மலர் தான் இவளல்லவா (2)

ராணா.. ராணா..
என்னைக் கொஞ்சு ராணா
உன்னை மிஞ்ச ஆணா
அழகு போகும் வீணா
நேரம் போக்க வேணா

தொட்டு வந்த முல்லை விட்டு வைத்ததில்லை
கொஞ்சும் அன்புத் தொல்லை
காட்டும் இன்ப எல்லை

ஜாரே ஜாரே ...

ஆதி அந்தம் ....

அன்னம் மட வண்ணம்
அழகைச் சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுதா மன்மதம் இவள் அழகு
எட்டும் திசை எட்டும்
தினம் கட்டும் பரிவட்டம்
இன்னும் சொல்ல மொழி இல்லையே

கோடி வேண்டுமா குடை வேண்டுமா
உன் மடி போல யாவும் சுகம் நல்குமா

படை வேண்டுமா பகை வேண்டுமா
உனைப் போல் வீழ்த்த ஆள் ஏது

மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈராக்கிறாய் பழி வாங்கவா

மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈர்க்கிறாய் எனை வாங்கவா
 

1769
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments