விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ

by savitha 2010-01-12 16:21:33


Get Your Own Hindi Songs Player at Music Plugin


விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும்
நான் செய்த பாவம் என்ன

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று சேர்வது காலன் விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
உனது ராஜாங்கம் இதுதானே ஒதுங்கக்கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று கண்களில் கண்ணீரை ஏன் கொடுத்தாய்
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே???

Tagged in:

2423
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments