சூர்ய கிரகணம்
by Ramya[ Edit ] 2010-01-16 09:31:06
360 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் அபூர்வ சூர்ய கிரகணம்
இந்த நூற்றாண்டின் மிக அசாதரணமான சூரிய கிரகணம் ஜனவரி 15 ஆம் நாள் நிகழ்ந்தது . இதனை சாதாரண கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருக்குமாறு விஞ்ஞானிகள் உலக மக்களை எச்சரித்துள்ளனர்.
சாதாரணமாக பூரண சூரிய கிரகணத்தின்போது சூரியன் இரண்டு அல்லது மூன்று நிமிஷங்கள் மறைக்கப்படும். அபூர்வமாக இது ஐந்து அல்லது ஆறு நிமிஷங்கள் நீடிப்பது உண்டு. எப்போதாவது ஏழு நிமிஷ நேரம் நீடிக்கலாம். பூரண சூரிய கிரகணத்தின்போது சூரியன் 6 நிமிஷம் 39 வினாடி மறைக்கப்பட்டது. இந்த நூற்றாண்டில் இதுவே மிக அதிகபட்ச நேரம் அபூர்வ சூரிய கிரகணமாகும்.
இந்த சூரியகிரகணம் 360 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும், மிக நீண்ட அரிய சூரிய கிரகணமாகும். முழு கிரகணம் (சூரியன் முழுமையாய் மறைவது) 6 நிமிடங்கள் 39 வினாடிகள் நீடிக்கும்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது, பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு முழுச் சந்திரன் சூரியனை மறைப்பது தான் சூரியகிரகணமாகும்.