நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ (நல்லதோர்) சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே சொல்லடி சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ (நல்லதோர்) விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம் வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன் நசையறு மணம் கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்.. உயிர் கேட்டேன்.. உயிர் கேட்டேன்.. தசையினைத் தீச்சுடினும் - சிவ சக்தியை பாடும் நல்லகம் கேட்டேன் அசைவுறு மதி கேட்டேன் - இவை அருள்வதில் உனக்கேதும் தடயுள்ளதோ (2) (நல்லதோர்) |