உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூ பூக்கவே நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன் நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை எந்த தானோ... உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது மெல்லிய ஆண் மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உன்னை ரசித்தேன் தொட்டதும் உதிர்ந்துவிடும் ஆணவம் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன் முள் குத்தும் உந்தன் மரபு என் பஞ்சு மெத்தையோ என் உயிர் பிறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ உன்னை போலே நான் இல்லையே நீயும் போனால் நான் இல்லையே நீரடிப்பதாலே மீன் அழுவதில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை.. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு நீ வீரமான கள்ளன் உள்ளுறும் சொல்லுது நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன் நீ வசிக்கும் குடிசை என் மட மளிகை காதலோடு பேதமில்லை உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூ பூக்கவே நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன் நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை எந்த தானோ... |