சீனா, இந்தியாவின் முன்னேற்றத்தால் ஒபாமா பீதி
by Rameshraj[ Edit ] 2010-02-03 12:02:52
பொருளாதார ரீதியாக சீனாவும், இந்தியாவும் முன்னேறி வருவதால் அமெரிக்கா 2வது இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ள ஒபாமா, ஒருபோதும் அந்த நிலைக்குச் செல்ல அமெரிக்கர்கள் விடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
நியூ ஹேம்ப்சையரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஒபாமா, “அமெரிக்காவின் எதிர்காலத்தை இந்தியா, சீனா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிடம் விட்டுக் கொடுப்பதை நான் விரும்பவில்லை. உலகளவில் 2ஆம் இடத்திற்கு அமெரிக்கா செல்லக் கூடாது” என்றார்.
பொருளாதாரம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இந்தியா, சீனாவின் அபார வளர்ச்சி குறித்து கடந்த ஒரு வார காலத்திற்கு உள்ளாக 2 முறை ஒபாமா அச்சம் தெரிவித்துள்ளார். ஆசியாவில் உள்ள இந்தியா, சீனாவின் வளர்ச்சியால் உலகளவில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் அமெரிக்காவுக்கு சிக்கல் ஏற்படும் என ஒபாமா அச்சப்படுவது குறிப்பிடத்தக்கது.