கனவா ... இல்லை காற்றா ...-Ratchagan

by bharathi 2010-02-04 10:00:31

கனவா ... இல்லை காற்றா ...
கனவா ... நீ .. காற்றா ...

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ ..
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே ..
நுரையா செய்த சிலையா நீ ...

இப்படி உன்னை ஏந்தி கொண்டே ...
இந்திரா லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும் ..
சந்திர தரையில் பாயிடவா ...

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும் ,
இன்று கண்டேனா ...
அதை கண்டு கொண்டேனடி ...

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது ..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது ...

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது ..
உன் மீதொரு பூ விழுந்தாலும் ..
என்னால் தாங்க முடியாது ..

Tagged in:

2087
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments