பாலும் பழமும் - காதல் சிறகைக் காற்றினிலே விட்டு

by Sanju 2010-02-04 17:51:54

படம் : பாலும் பழமும்
பாடல்: காதல் சிறகைக் காற்றினிலே விட்டு
குரல்: சுசீலா
வரிகள்: கண்ணதாசன்


காதல் சிறகை காற்றினிலே விட்டு வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க் கடலில் குளிக்கவா
கண்ணீர்க் கடலில் குளிக்கவா

எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா
இரு கை கொண்டு வனங்கவா

(காதல்)

முதல் நாள் காணும் திருமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் நடந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா
பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னிதி
அதுதான் காதல் சன்னிதி

(காதல்)

Tagged in:

1660
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments