அக்னி நட்சத்திரம் படம் - நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் பாடல்

by Sanju 2010-02-04 17:52:41

படம் : அக்னி நட்சத்திரம்
பாடல்: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
குரல்: சித்ரா


நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் - இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே - அனுதினமும்

(நின்னுக்கோரி)

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேகம் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட

(நின்னுக்கோரி)

பெண்ணல்ல வீணைதான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோரும்
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கயில்

(நின்னுக்கோரி)

Tagged in:

1571
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments