அச்சமில்லை அச்சமில்லை படம் - ஓடுகிற தண்ணியில
by Sanju[ Edit ] 2010-02-04 17:52:52
படம் : அச்சமில்லை அச்சமில்லை
பாடல்: ஓடுகிற தண்ணியில
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சுசீலா
வரிகள்: வைரமுத்து
மேகத்தத் தூதுவிட்டா தெச மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்த கன்னி தந்துவச்ச முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற?
நீ எப்ப வந்து தரப்போற?
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஒல ஒண்ணு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் கைகளிலே
அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே
கொடையும் இல்ல படையும் இல்ல தூறலுக்கு ஆதரவா
தாவணிய நீ பிழிய கலசம் வெட்ட நான் வரவா
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்
அய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்
(ஓடுகிற)
மலர்த் தோட்டத்து குயிலே இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க
அருவி போல அழுகிறத அறிந்துகொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஒரமென்னை முடிந்துகொண்டால் ஆகாதோ?
வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ?
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வௌளக்கப் போறதெப்போ?
(ஓடுகிற)