படம் அபூர்வ ராகங்கள் - ஏழு ஸ்வரங்களுக்குள்

by Sanju 2010-02-04 17:51:37

படம் : அபூர்வ ராகங்கள்
எம் எஸ் விஸ்வனாதன்

பாடல்: ஏழு ஸ்வரங்களுக்குள்
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: கண்ணதாசன்


ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம் (2)

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (2)

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று (2)

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் (2)

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க (2)
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல (2)

(ஏழு)

Tagged in:

1840
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments