படம் அண்ணன் ஒரு கோவில் - அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ
by Sanju[ Edit ] 2010-02-04 18:23:32
படம் : அண்ணன் ஒரு கோவில்
எம் எஸ் விஸ்வனாதன், 1977
பாடல்: அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்
அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ
அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ
(அண்ணன்)
பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்துப் பார்ப்பதற்கு
அண்ணனன்றி யாரும் உண்டோ இன்னும் ஒரு சொந்தமுண்டோ
அதன் பேர் பாசமன்றோ
(அண்ணன்)
தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை
கண்திறந்த நேரம் முதல் கைகொடுத்த தெய்வமன்றோ
அதன் பேர் பாசமன்றோ
(அண்ணன்)