துபாய் கடலில் செயற்கை தீவுகள்
by Geethalakshmi[ Edit ] 2010-02-04 18:45:03
துபாய் கடலில் செயற்கை தீவுகள்
துபாய் அருகே கடலில் புதிதாக தீவுகள் அமைக்கும் பணி 2001ல் துவக்கப் பட்டது. பாமாயில் மரம் போன்று அமைக்கப்பட்டுள்ளதற்கு ஜுமாரியா என்றும் "பாம்` தீவு எனவும் பெயரிடப் பட்டுள்ளது. இதற்காக கடலில் இருந்தும், வேறு இடங்களில் இருந்தும் ஐந்து கோடி கியூபிக் மீட்டர் அளவு மணல் சேகரிக்கப் பட்டு இங்கு கொட்டப் பட்டது.பெர்சியன் கடலில் அமைந்துள்ள இந்த தீவு, கடல் மட்டத்தை விட உயரமாக அமைக்கப் பட்டுள்ளது.
அடுத்ததாக 2003ல் பணி துவங்கி 2008ல் குட்டி, குட்டியாக "உலக தீவு` என 300 தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.இதற்காக 32 கோடி கியூபிக் மீட்டர் மணல், 3.7 கோடி டன் பாறைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்த தீவுகளில் கடல் நீர் புகாதவாறு பாதுகாப்பு அமைப்பு உள்ளது.