ஆஸி.யின் புத்திசாலி மாணவி 14 வயது இந்திய சிறுமி
by Geethalakshmi[ Edit ] 2010-02-04 18:47:52
ஆஸி.யின் புத்திசாலி மாணவி 14 வயது இந்திய சிறுமி
ஆஸ்திரேலியாவின் புத்திசாலி மாணவியாக 14 வயது இந்திய சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுவாழ் இந்தியரான உமா ஜா, ஆஸ்திரேலியாவின் ஷென்டன் பார்க் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருகிறார். நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கிடையே புத்திசாலி மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். திறமை, ஞாபக சக்தி, உணர்வு, தூக்கம், உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான போட்டியில் 4000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தேசிய அளவிலான இறுதிப் போட்டி சிட்னியில் நடைபெற்றது. மூளை ஆய்வு, உடல்கூறு தேர்வு, நரம்பியல் போட்டி ஆகியவை அடங்கிய இதில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி இந்திய வம்சாவழியைச் சேர்ந்த உமா முதலிடம் பிடித்தார். இவருக்கு ஆஸ்திரேலியாவின் புத்திசாலி மாணவி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
ÔÔதேசிய அளவிலான அறிவியல் போட்டியில்முதல் முறையாக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டபோதும், போட்டியின் இறுதி வரை பதற்றமாகவே இருந்ததுÕÕ என உமா தெரிவித்துள்ளார். உமாவின் பயணம் இத்துடன் முடியப் போவதில்லை. வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான திறமையான மாணவர்களுக்கான போட்டியில் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.