தெரு நாய்க்கு சம்பளம் ரூ.1,500

by Geethalakshmi 2010-02-04 18:49:17

தெரு நாய்க்கு சம்பளம் ரூ.1,500




காத்மாண்டு : தெரு நாயின் நன்றி விசுவாசம் மற்றும் காவலுக்கு மாதம் ரூ.1,500 சம்பளம் அளிக்கும் அதிசயம், நேபாளத்தில் நடக்கிறது.
கிழக்கு நேபாளத்தின் ஜாபா மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் கிளை உள்ளது. அங்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் ஒரு தெரு நாய் வந்தது. அதன் பிறகு அதே வளாகத்தில் தங்கத் தொடங்கியது. செஞ்சிலுவைச் சங்கக் கட்டிடத்தை விட்டு அதை விரட்டும் ஊழியர்களின் முயற்சி பலிக்கவில்லை.
இரவு நேரத்தில் கட்டிடத்தின் வாசலில் படுத்து காவல் காக்கும் அந்த நாய், ஊழியர்களைத் தவிர யாரும் உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. இதையடுத்து, அதன் பராமரிப்பு செலவுக்கு மாதம் ரூ.1,500 செலவிட சங்கத்தினர் முடிவு செய்தனர்.

இதுபற்றி செஞ்சிலுவைச் சங்க கிளையின் தலைவர் பகதூர் புதாதோகி கூறுகையில், ÔÔநாய் காட்டும் விசுவாசம், காவல் பணிக்காக மாதம் ரூ.1,500 செலவிட உள்ளோம். நாயின் உணவு, மருத்துவ செலவுக்கு இது பயன்படுத்தப்படும் என்றார்.

செஞ்சிலுவை சங்க கிளையின் செயலர் லீலா குர்கைன் கூறுகையில், இனி தனது அயராத காவலுக்காக நாய் பெற உள்ள மாதத் தொகையில் தினமும் சாதம், பால் அதற்கு அளிக்கப்படும். வாரம் இரண்டு முறை மாமிச உணவு தரப்படும் என்றார்.
1910
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments