படம் அம்மன் கோயில் கிழக்காலே - சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே

by Sanju 2010-02-04 18:57:47

படம் : அம்மன் கோயில் கிழக்காலே
இளையராஜா

பாடல்: சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்


சின்ன மனிக் குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம
குக்கூவெனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன)

நில்லாத வைகையிலே நீராடப் போகயிலே
சொல்லாத சைகையிலே கண்ஜாட செய்கயிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உளள கனக்குதடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கணும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன)

பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி
எட்டு அடியெடுத்து எட்டி நடந்துல
உன் சேல காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பார்த்து
என் எண்ணம் கூத்தாட
மாறாப்பு சேலையில நூலப்போல நானிருக்க
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன)

Tagged in:

1677
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments