படம் அம்மன் கோயில் கிழக்காலே - உன் பார்வையில் ஒராயிரம்

by Sanju 2010-02-04 18:57:55

படம் : அம்மன் கோயில் கிழக்காலே
இளையராஜா

பாடல்: உன் பார்வையில் ஒராயிரம்
குரல்: சித்ரா
வரிகள்: வைரமுத்து


உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

(உன் பார்வையில்)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2)
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் (2)
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

(உன் பார்வையில்)

Tagged in:

1650
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments