படம் அன்பே வா - புதிய வானம் புதிய பூமி

by Sanju 2010-02-04 18:58:10

படம் : அன்பே வா
எம் எஸ் விஸ்வனாதன்

பாடல்: புதிய வானம் புதிய பூமி
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்


புதிய வானம் புதிய பூமி - எங்கும்
பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ

லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா

(புதிய வானம்)

புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே
இமயத்தில் எழுகின்ற குளிர்காற்று - என்
இதயத்தைத் தொடுகிறது
அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த
அந்தக் காலம் தெரிகிறது
அந்தக் காலம் தெரிகிறது

(புதிய வானம்)

சின்னக் குழந்தைகளைப் பார்க்கையிலே
பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் - என்ற
நம்பிக்கை தெரிகிறது
அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும்
என்று ஆசை துடிக்கிறது
என்று ஆசை துடிக்கிறது

(புதிய வானம்)

எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி - இங்கு
இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்

(புதிய வானம்)

Tagged in:

2076
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments