படம் அன்பே வா - உள்ளம் என்றொரு கோவிலிலே பாடல்
by Sanju[ Edit ] 2010-02-04 18:58:14
படம் : அன்பே வா
எம் எஸ் விஸ்வனாதன்
பாடல்: உள்ளம் என்றொரு கோவிலிலே
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
அன்பே வா அன்பே வா வா வா வா
உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா அன்பே வா வா வா வா
நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பாதையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லை
பார்வையும் தெரியவில்லை
ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை
(உள்ளம் என்றொரு)
வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்துவந்தே
காதலை வாழவைப்பேன்
அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்
(உள்ளம் என்றொரு)