படம் அரசிளங்குமரி - சின்னப்பயலே சின்னப்பயலே

by Sanju 2010-02-04 18:58:25

படம் : அரசிளங்குமரி
பாடல்: சின்னப்பயலே சின்னப்பயலே
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார்


சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேலடா
நான் சொல்லப்போகும் வார்தையை நல்லா என்னிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா

(சின்னப்பயலே)

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ??? - உன்
நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
தன்மான உணர்ச்சி

(சின்னப்பயலே)

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லிவெப்பாங்க - உன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளிவெப்பாங்க - இந்த
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே - நீ
வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே

(சின்னப்பயலே)

Tagged in:

1722
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments