படம் அரிச்சந்திரா - நாடோடிப் பாட்டுப் பாட

by Sanju 2010-02-04 18:58:30

படம் : அரிச்சந்திரா
ஆகோஷ்

பாடல்: நாடோடிப் பாட்டுப் பாட
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்


நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
நாடோடி பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில் வருவதுதானா காதல்
அறுபதுவரையில் தொடர்வதுதானே காதல்
சிரிக்கிறபோது சிரிப்பதுதானா காதல்
அழுகிறபோது ஆறுதல்தானே காதல் ஹே...
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹே...பூவிலே தேன் தேடவா

கண்ணை மெல்ல மூடிச் சாய்ந்துகொள்ளும்போது மடியாக வேண்டுமே
தட்டுத்தடுமாறி சோர்ந்து விழும்போது பிடியாக வேண்டுமே
உன் உள்ளம் நான் கண்டு என் உள்ளம் நீ கண்டு
உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல்தானே காதல்
மலர் விட்டு மலரைத் தாவுவதா நல்ல காதல்
ஒருத்திக்கு ஒருவன் என்பதுதானே காதல் ஹே...
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா

ஏ...ஏ...ஏ...தந்தனா தானே தந்தானே
ஏ...தந்தனா தானே தந்தானே
கங்கை நதி என்ன காவேரி என்ன எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும் தாங்குகிற பூமி அதுகூடப் பெண்மையே
நாடாளும் ஆணுக்கும் வீடாளப் பெண் வேண்டும்
கடல்போன்ற வாழ்வினில் கலங்கரை விளக்கம்தானே பெண்மை
பெண்ணிடம் மனதை கொடுத்துவிட்டாலே போதும்
பௌளர்ணமிதானே வாழ்வின் எந்த நாளும் ஹே...
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா

(நாடோடிப்)

Tagged in:

1771
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments