படம் அலைகள் ஓய்வதில்லை - புத்தம் புதுக் காலை

by Sanju 2010-02-04 18:58:44

படம் : அலைகள் ஓய்வதில்லை
இளையராஜா

பாடல்: புத்தம் புதுக் காலை
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: வைரமுத்து

புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் என்னாளும் ஆனந்தம்

(புத்தம்)

பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ - இளம்
பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்

(புத்தம்)

வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ - பனி
வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவைகூடுது

(புத்தம்)

Tagged in:

1662
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments