படம் ஆனந்தக் கும்மி - ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது

by Sanju 2010-02-04 19:22:07

படம் : ஆனந்தக் கும்மி
இளையராஜா

பாடல்: ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
குரல் எஸ் ஜானகி, எஸ் பி ஷைலஜா


ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஓ மைனா மைனா
தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா ஓ மைனா

(ஒரு கிளி)

நிலவெரியும் இரவுகளில் ஓ மைனா ஓ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஓ மைனா ஓ மைனா
கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஓ மைனா ஓ மைனா

(ஒரு கிளி)

இலைகளிலும் கிளைகளிலும் ஓ மைனா ஓ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஓ மைனா ஓ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஓ மைனா ஓ மைனா

(ஒரு கிளி)

Tagged in:

1551
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments