படம் : ஆனந்தக் கும்மி
இளையராஜா
பாடல்: ஓ வெண்ணிலாவே வா ஓடிவா
குரல் எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
ஆனந்தக் கும்மியடி கும்மியடி வானமெல்லாம் கேட்கட்டும்
இந்திரரும் சூரியரும் எட்டி எட்டிப் பார்க்கட்டும்
தங்கச் சமுக்காளம் தரையெல்லாம் விரிச்சிருக்க
மதுர மல்லிகப் பூ மண்டபத்தில் எறச்சிருக்க
முத்துமணித் தோரணங்கள் வீதியெல்லாம் ஒயிச்சிருக்க
அன்னங்களும் கொடபிடிக்கும் அலங்கார மேடையிலே
கல்யாணக் குயிலிரண்டு கச்சேரி பாடட்டும் (2)
ஓ வெண்ணிலாவே வா ஓடிவா (2)
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல வா
(ஓ வெண்ணிலாவே)
நிலவின் ஜாடை தெரியும் ஓடை அழகே நீயும் நீராடு
மலர்கள் சேர்த்து மாலை கோர்த்து அடடா நீயும் பூச்சூடு
கதைகள் பேசு கவிகள் பேசு விடியும் வரையில் நீ பாடு
நிலவே நீயும் தூங்காதே
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல வா
(ஓ வெண்ணிலாவே)
இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு இதுதான் முடிவு வேறேது
இறக்கும்போதும் இதுவே போதும் இனிமேல் பிறவி வாராது
காதல் மாலை சூடும் வேளை அழுகை ஏனோ கூடாது
நிலவே நீயும் தூங்காதே
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல வா
(ஓ வெண்ணிலாவே)
ஆனந்தம் கொண்டு நீங்கள் இன்று போல் வாழ்கவே
ஆயிரம் பௌளர்ணமிகள் கண்டுதான் வாழ்கவே
ஆதியில் சேர்ந்த காதல் ஆனந்தம் காணவே
ஆகாயம் உள்ள மட்டும் அழியாமல் வாழ்கவே