படம் ஆயிரம் நிலவே வா - அந்தரங்கம் யாவுமே
by Sanju[ Edit ] 2010-02-04 19:22:19
படம் : ஆயிரம் நிலவே வா
இளையராஜா
பாடல்: அந்தரங்கம் யாவுமே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி
ம்ம்ஹ்ம் எப்படி எப்படி...
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா?
காதலின் வாசனை ம்ஹ்ஹ்ம் அறியுமா?
அந்தரங்கம் யாவுமே...
காதலை தானம் கேட்டேன் என்ன ஒரு தாராளம்
நானவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம்
தாவணிப் பூவினை சோதனை செய்கிறேன்
எத்தனை மச்சங்கள் கேள் அதைச் சொல்கிறேன்
பாவை உடலில் கோடி மலரில் ஆடை அணிவேன்
ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிவேன்
நாணமே சேலையானதும் போதையானதும் என்னென்று சொல்ல
(அந்தரங்கம்)
காமனே நாணம் கொண்டால் சொல்லியது தீராது
கம்பனே வந்தால் கூட கட்டுபடியாகாது
கண்டதில் இன்று நான் சொல்வது பாதியே
காவிய நாயகி கண்ணகி ஜாதியே
அன்று ஒரு நாள் அந்த மயிலாள் ஆடை நனைந்தாள்
காயும் வரையில் தோகை உடலில் என்னை அணிந்தாள்
மீதியை நானுரைப்பதும் நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை
(அந்தரங்கம்)