படம் ஆலயமணி - பொன்னை விரும்பும் பூமியிலே

by Sanju 2010-02-04 19:22:49

படம் : ஆலயமணி
விஸ்வனாதன்-ராமமூர்த்தி

பாடல்: பொன்னை விரும்பும் பூமியிலே
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்


பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலயும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே

(பொன்னை)

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே (2)
தாய்மை எனக்கே தந்தவர் நீயே தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம் புதிய தீபம் கொண்டு வந்தாயே

(பொன்னை)

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன் பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் (2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் அழைத்து வந்தார் உன்னிடம் என்னை
இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே

(பொன்னை)

ஆல மரத்தின் விழுதினைப் போலே அனைத்து நீயும் உறவு தந்தாயே (2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே

(பொன்னை)

Tagged in:

1533
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments