படம் இதயத்தைத் திருடாதே - விடிய விடிய நடனம் சந்தோஷம்
by Sanju[ Edit ] 2010-02-04 19:53:42
படம் : இதயத்தைத் திருடாதே
இளையராஜா
(198
பாடல்: விடிய விடிய நடனம் சந்தோஷம்
குரல்: மனோ, குழுவினர்
விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்
(விடிய விடிய)
காலங்கள் உதயமாகட்டும் கவலைகள் விலகி ஒடட்டும் காட்டாறு நாமல்லவோ
வா மனிதா உலகை ஆளலாம் வாழ்க்கை என்ன வாழ்ந்து காட்டலாம் ராஜாதி ராஜாக்கள் போல்
ஏனென்று கேள்வி கேட்கவும் யாரும் இல்லை எங்கேயும் கால்கள் போகலாம் ஏது எல்லை
கொண்டாட்டம் கும்மாளம் தானே தப்பாத தாளங்கள் நாம் போட...
தக தக திமி தக தக
(விடிய விடிய)
பாடுங்கள் புதிய கீர்த்தனம் எழுதுங்கள் புதிய சாசனம் வாழட்டும் சமுதாயமே
ஆடுங்கள் புதிய தாண்டவம் அழியட்டும் பழைய தத்துவம் அச்சங்கள் நமக்கில்லையே
ஓர் நாளும் ஓய்வதில்லையே நம் போராட்டம் ஓர் நாளும் சாய்வதில்லையே நம் தேரோட்டம்
ஆரம்பம் ஆனந்த கீதம் தப்பாத தாளங்கள் நாம் போட....
தக தக திமி தக தக
(விடிய விடிய)