படம் : இந்திரா
ஏ ஆர் ரஹ்மான்
பாடல்: ஏ ஓடக்கார மாரிமுத்து
குரல்: ஸ் பாலசுப்ரமணியம், சீர்காழி சிவசிதம்பரம், குழுவினர்
வரிகள்: வைரமுத்து
பச்ச பாவக்கா...பளபளங்க...பழனி பச்ச...மினுமினுங்க...
செங்கருட்டி...செவத்தபுள்ள...கின்னாவந்தா...கினுகட்டி...
உடும்பு...துடுப்பு...மகா...சுகா...
பா...பரங்கி...எட்டுமண்...குண்டுமண்
ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க ¦ºளக்கியமா
ஏ அரிசிக்கட ஐய்யாவுப் பொண்ணு ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு ¦ºளக்கியமா
பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா (2)
பட்டணத்து ஸ்டைலக்கண்டா பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவாடக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது
(ஓடக்கார)
குண்டுப் பொண்ணு கோமலவள்ளி என்னானா என்னானா
ரெட்டப்புள்ள பொறந்ததுமே நூலானா நூலானா
குள்ள வாத்து டீச்சர் கனகா
ஐயோ...பார்வையில பச்ச மொளகா
மேற்படிப்பு படிக்கப் போனா மேற்கொண்டு என்ன ஆனா
மொத்தத்துல மூணு மார்க்கில் ஃபெயிலானா ஃபெயிலானா
ஒல்லிக்குச்சி ராஜமீனா ஓடிப்போனா என்ன ஆனா
பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே
(ஏ ஓடக்கார)
அம்மன் கோயில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு
சாதிச் சண்ட கலவரத்துல ரெண்டாச்சு ரெண்டாச்சு
மேலத்தெரு கருப்பையாவும் கீழத்தெரு செவத்தம்மாளும்
சோளக்காட்டு மூலையில ஜோடிசேர்ந்த கதையென்னாச்சு
மூத்த பொண்ணு வயசுக்குத்தான் வந்தாச்சு வந்தாச்சு
மத்த கதை எனக்கெதுக்கு எங்குருவி எப்படி இருக்கு
தாவிச்செல்லு குருவி இன்னிக்கு தாவணி போட்டிருக்கு
(ஏ ஓடக்கார)