படம் இரு மலர்கள் - மஹராஜா ஒரு மஹராணி

by Sanju 2010-02-04 19:56:28

படம் : இரு மலர்கள்
பாடல்: மஹராஜா ஒரு மஹராணி
குரல்: டி எம் சௌந்தரராஜன், சாதன், ஷோபா
வரிகள்: வாலி


மஹராஜா ஒரு மஹராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டிராணி
குட்டிராணி...

(மஹராஜா)

பொங்கும் அழகில் தங்க நிலாவில் தங்கச்சி பாப்பாவோ
புத்தம் புதிய பூச்செண்டாட்டம் புன்னகை செய்வாளோ
அம்மம்மா...

(மஹராஜா)

மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா
மாலைத் தென்றல் சொன்னதைக் கேட்டும் மந்திரி ஆனதம்மா
பூனையும் நாயும் காவல் காக்கும் சேனைகள் ஆனதம்மா
அம்மா அப்பா மடிமேல் இவளின் ராஜாங்கம் நடக்குதம்மா
அம்மம்மா...

(மஹராஜா)

யாரது இங்கே மந்திரி குட்டி ராணி வந்தாளே எந்திரி
வணக்கம் வணக்கம்...
வணக்கம் வணக்கம் சின்ன ராணி இங்கு எனக்கிட்ட கட்டளை என்ன ராணி

ஓடிப் பிடித்து விளையாட ஒரு தம்பிப்பாப்பா வேண்டும் என்கூட (2)

ஆகட்டும் தாயே அதுபோலே
நீங்கள் நினைத்ததை முடிப்பேன் மனம்போலே

இவளுக்கொரு தம்பிப்பயல் இனிமேல் பிறப்பானோ
இளவரசன் நாந்தானென்று போட்டிக்கு வருவானோ

Tagged in:

1679
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments