பைல் பெயரை ஒரே தடவையில் மாற்றிட..

by satheesh 2010-02-05 15:38:10

டிஜிட்டல் கேமராவிலிருந்து படங்களை ட்வுன்லோட் செய்யும்போது அவற்றின் பெயர்கள் அனேகமாக உங்களால் புரிந்து கொள்ள முடியாத பெயர்களாக இருக்கும்.. அந்த பைல்களின் பெயர்களை (File Name) நீங்கள் விரும்பியபடி மாற்றிக் கொள்ள நினைத்தால் ஒவ்வொன்றாக மாற்றாமல் ஒரே முறையில் எல்லா பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளும் வ்சதியை (Batch File Rename) விண்டோஸ் தருகிறது. இந்த வசதி மூலம் படங்கள் மட்டுமன்றி எந்த வகையான பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். .

படங்கள் உள்ள போல்டரைத் திறந்து பெயரை மாற்ற வேண்டிய படங்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள் பெயரை மாற்ற வேண்டிய படங்கள் அருகருகே இல்லாமல் வேவ்வேறு இடங்களில் இருக்குமாயின் Ctrl விசையை அழுத்தியவாறு படங்கள் மீது க்ளிக் செய்யுங்கள். அடுத்து File மெனுவில் அல்லது ரைட் க்ளிக் செய்து Rename தெரிவு செய்யுங்கள். பின்னர் அந்த பைலுக்குப் புதிய பெயரை டைப் செய்து Enter கீயை அழுத்துங்கள். நீங்கள் தெரிவு செய்த பைல்கள் அனைத்தும் வழங்கிய புதிய பெயரோடும் ஒரு தொடரிலக்கத்துடனும் மாறியிருக்கக் காண்லாம். உதாரணமாக முதல் பைலுக்கு Piraba என வழங்கினால் ஏனைய பைல்கள் Piraba(1), Piraba (2) என மாறியிருப்பதைக் காணலாம். முதல் பைலுக்குப் பெயருடன் அடைப்புக் குறிக்குள் ஒரு இலக்கத்தையும் சேர்த்து வழங்கும்போது ஏனைய பைல்களும் தொடர்ச்சியாக மாறக் காணலாம். அதாவது முதல் பைலுக்கு Piraba (10) என வழங்கும்போது அடுத்த் பைல்கள் Piraba (11), Piraba(12) என மாறும்.
2177
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments