நீங்கள் சிறந்த நண்பரா...? இங்கே சோதித்துக் கொள்வீர்!

by satheesh 2010-02-05 17:23:40


தோழன்/தோழி... ஒவ்வொருவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாதவன்/முடியாதவள். வாழ்க்கை முழுமையடைய இன்றிமையாததே தோழமை.

அந்த வகையில், நீங்கள் சிறந்த நண்பராக இருக்கிறீர்களா? நல்ல நண்பராக இருக்க வேண்டிய வரையறைகளை அறிந்து, அவற்றைக் கடைப்பிடித்தது வருகிறீர்களா?

தன்னைத் தானே சோதித்து அறிந்துகொள்ள இதோ 10 கேள்விகள்...
அவற்றுக்கு பதிலளித்த பின், உங்களது நட்பின் தரத்தை நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம்.

முத‌லி‌ல் ஒரு கா‌‌கித‌ம் ம‌ற்று‌ம் பேனாவை எடு‌த்து‌க் கொ‌ண்டு உ‌ங்களது கே‌ள்‌வி எ‌ண்ணையு‌ம், ப‌திலு‌க்கான எழு‌த்தையு‌ம் வ‌ரிசையாக கு‌றி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌பி‌ன்ன‌ர் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள‌க் கூடாது.


1) உங்கள் வாழ்நாட்களுக்கு போதுமான அளவில் பணம், ஓர் அறையில் உள்ளது. வாழ்நாள் முழுவதும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வல்லமையும் அக்கறையும் கொண்ட நண்பர் மற்றொரு அறையில் இருக்கிறார். உங்களது தெரிவு என்ன?

அ) நண்பர்
ஆ) பணம்
இ) பூவா, தலையா போட்டு தேர்வு செய்வேன்.


2) ஒருவரிடம் நட்பு கொண்ட பின், அது மென்மேலும் வளர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வது எப்போது?

அ) தருணம் வரும்போது மட்டுமே முயற்சி செய்வேன்.
ஆ) எப்போதும் முயற்சி செய்வேன்
இ) நடப்பது நடக்கட்டும் என விட்டுவிடுவேன்.


3) நண்பர் தன்னையறியாமல் தவறிழைத்தபோது...?

அ) கண்டுகொள்ளவே மாட்டேன்
ஆ) என்னைப் பற்றி தவறாக எண்ணிவிடுவார் என்பதால், தவறை எடுத்துரைக்க மாட்டேன்
இ) நண்பர் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை, தவறை உணர்த்துவேன்.


4) நண்பரை தேர்வு செய்யும்போது, எதை கவனத்தில் கொள்வது?

அ) கருத்து ஒற்றுமை
ஆ) தேக ஒற்றுமையும், பழக்கவழக்கமும்
இ) ஏதுமில்லை.


5) நண்பருக்காக எத்தகைய காரியங்களைச் செய்வது?

அ) நண்பரின் முகத்தில் புன்னகைப் பூக்கும்படியான செயல்கள்
ஆ) நண்பரின் மனம் மகிழும்படியான காரியங்கள்
இ) இந்தக் கேள்வி எனக்குப் பொருந்தாது.


6) நண்பருக்கு ஆபத்து நேரும்போது...

அ) எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவுவேன் ஆ) நட்புக்கு தற்காலிக ஓய்வு தருவேன்
இ) நம்மால் ஆபத்தை நீக்க முடியுமா? என யோசிப்பேன்.


7) நண்பரிடம் பகிர்ந்து கொள்வது...

அ) இன்பம் மட்டுமே
ஆ) இன்பமும் துன்பமும்
இ) களிப்பினை மட்டுமே.


Cool
நண்பரிடம் ஏதேனும் திறமையைக் கண்டுணர்ந்தால்...

அ) உள்ளே பொறாமை இருக்கும், ஆயினும் புகழ்ந்து பேசுவேன்
ஆ) பொறாமையின்றி வாயாறப் புகழ்வேன்
இ) புகழ்வதோடு, அந்தத் திறமை மென்மேலும் வளர்வதற்கு உதவுவேன்; ஊக்கப்படுத்துவேன்.


9) உங்களுக்கு விருப்பமில்லாத செயலை உங்கள் நண்பர் செய்யும்போதோ அல்லது விரும்பாத பொருளை தரும்போதோ...

அ) தயங்காமல் ஏற்றுக்கொள்வேன்
ஆ) எனக்கு விருப்பமில்லை என்று நிதானமாக புரியவைப்பேன்
இ) உரிமையோடு பகிரங்கமாக மறுத்துவிடுவேன்.


10) உங்கள் நீண்டகால நண்பரே உங்களுக்கு தீமையிழத்தால்..?

அ) நட்பை முறித்துக் கொள்வேன்
ஆ) அன்பு மாறாமல் நட்பைத் தொடர்வேன்
இ) பழிவாங்குவேன்.


உங்களது 10 விடைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா? இதோ முடிவுகள்...


நீங்கள் தேர்வு செய்தவை 1-அ, 2-ஆ, 3-இ, 4-அ, 5-ஆ, 6-அ, 7-ஆ, 8-இ, 9-அ, 10-ஆ எனில்...


உங்கள் பெயரை அகராதியில் தேடுங்கள். அங்கே உங்களது பெயரின் அர்த்தம் ‘நட்பு’ என்றிருக்கும். ஆம், நீங்கள் சிறந்த நண்பர் மட்டுமல்லர்; நட்பின் இலக்கணமும் கூட!


நீங்கள் தேர்வு செய்தவை 1-ஆ, 2-அ, 3-ஆ, 4-இ, 5-அ, 6-இ, 7-அ, 8-ஆ, 9-ஆ, 10-அ எனில்...


உங்களால் சிறந்த நண்பராக முடியும். ஆனால், சூழ்நிலையில் கைதியாகிவிடுகிறீர்கள். உங்களது நட்பால், எவருக்கும் பாதகம் இல்லை. எனினும் முயன்றால், நீங்கள் எளிதில் சிறந்த சிநேகிதராகலாம்.


நீங்கள் தேர்வு செய்தவை 1-இ, 2-இ, 3-அ, 4-ஆ, 5-இ, 6-ஆ, 7-இ, 8-அ, 9-இ, 10-இ எனில்...


மன்னிக்கவும். உங்களுக்கு நண்பராகும் தகுதி, அறவே இல்லை. தயவு செய்து உங்கள் எண்ணப் போக்கை மாற்றிக்கொண்டு, நண்பர்கள் பலரைப் பெற, ‘நட்பு தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.
1966
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments